பழகிய உங்கள் பாதை

பழகிப்போன பாதைகள்
பழக்கப்படுத்திக் கொண்ட நினைவுகள் ....
கரண்டு கம்பத்தின் வெளிச்சம்
கைப்பற்றி அழைத்து செல்வதை போலவே இருக்கும் ....
கொத்து பரோட்டா போடும் சத்தம்
புதுவித இசையாக இருக்குமோ என்று கூட தோனுகிறது ....
வானொயில் மெல்லிசாம ஒடும் மயக்கமா கலக்கமா....
எதிர்த்த தெருவில் குழாயடி சண்டையின் மீதி சத்தங்கள் ...
மிஞ்சியிருக்கிற உணவை பகிர்ந்து கொள்ள மனமில்லாமல் சமரமில்லா சண்டையில் தெரு நாய்கள் ....
மல்லிகா அக்காவின் ஆராரோ தாலாட்டு ....
எதிர்த்த வீட்டில் குடிகார கணவனின் குடிபோதை வார்த்தைகள் ....
எல்லோரும் சாப்பிட்ட பின்பு பாத்திரம் கழுவும் அம்மாவின் தண்ணீர் சத்தம் .....
காலையில் போட்ட செய்தியையே திருப்பி திருப்பி பார்க்கும் அப்பாவின் தொலைக்காட்சி சத்தம்
குறுஞ்செய்தியில் குத்தவைத்திருக்கும் அண்ணணின் வாட்சப் சத்தம் அனைத்தும்
பழகியே விட்டது ...
புதிதாக எதையாவது தேடி பயணிக்க கவி்தையில் நம்மை விதைக்கின்றோம் ...

எழுதியவர் : க.நாகராணி (1-Nov-16, 11:26 pm)
பார்வை : 781

புதிய படைப்புகள்

மேலே