வெண்பா வித்தகம்
காட்டினி லாடும் கருமுகில் கண்டதும்
பாட்டின்றிக் காலசைத்துப் பாங்குடனே!- நாட்டமுடன்
பார்ப்போர் வியந்து படமெடுக்க கோலமயில்
தேர்போல் குலுங்கும் சிலிர்த்து .
ஆடும் மயிலாள் அபிநயத்தில் கால்கொலு
சோடு சதங்கையும் துள்ளிடும் !- தோடுடன்
நெற்றியின் சுட்டியும் நேர்த்தியா யாடிடும்
சிற்றிடையில் மேகலையும் சேர்ந்து .
மயிலாடும் காட்டில் மரக்கிளை தன்னில்
குயில்பாட கிள்ளையும் கொஞ்சும் ! - ஒயிலாக
மந்தியும் தாவிட மான்களுடன் வேழமும்
சொந்தமெனச் சுற்றும் சுகம்.
வெண்பா வித்தகம்: (இரண்டில் ஒன்று!)
````````````````````````````
அமைப்பு:
```````````````
ஒவ்வொரு வெண்பாவிலும் முதற்சீர்
* முந்தைய வெண்பாவின் இரண்டாம் சீராகவோ,
* முந்தைய வெண்பாவின் இரண்டாம் சீர் முதலசையாகவோ
அந்தாதி போல் மண்டலித்துவர எழுதுவது.
குறைந்தது மூன்று வெண்பாக்கள்.
இறுதி வெண்பாவின் இரண்டாம் சீர்
* முதன்முதல் வந்த வெண்பாவில் முதற்சீராகவோ
* அல்லது அதன் முதலசையாகவோ அமையும்.