மூடர் உலகம்
இல்லாத தெய்வங்களுக்கெல்லாம்
ஓர் அறை செய்து
கோவில் கட்டி
அதில் சாமி படம் வைத்து
பூஜை செய்யும் மூடர்கள்....
ஏனோ ?
ஈன்ற தெய்வங்களை
வீட்டை விட்டு விரட்டி
முதியோர் இல்லத்தில்
தள்ளிவைக்கிறார்கள்...!
மூடர்கள் வாழும் உலகில்
முரண்பாடுதானே ஆளும்...!
இங்கு மனிதன் வாழ்வது பாவம் !