இதுவே வாழ்க்கை

உதய சூரியனில்
உலகின் விழிப்பு
நிலவின் தாலாட்டில்
உலகின் உறக்கம்
உறக்கம் தந்திடும்
கற்பனை உலகம்
கற்பனை பிம்பம்
காணும் கனவுகள்
உறக்கம் கழிந்திட
மீண்டும் விழிப்பு
ஜன்னலில் கதிரவன்
கிரணங்கள் சுட்டெரிப்பு
விழிப்பும் உறக்கமும்
மனிதன் இயக்கம்
விழிக்க மறந்தால்
தழுவிடும் மறைவு
இதுவே இயற்கையின்
கால சக்கரம்
நம்மை மயக்கிடும்
மாய சக்கரம்
இதை அறிந்துகொண்டால்
கவலை இல்லை நமக்கு
சித்தன் விளக்கமும்
இதுவே இதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Nov-16, 3:00 pm)
Tanglish : ithuvae vaazhkkai
பார்வை : 187

மேலே