பாசம் கொண்ட நாய்

காமம் கழிய
காதல் கொண்டு
தோல்கள் உரசி
கலவி கொள்ள

இன்பம் இதுவோ
இதுதான் உலகம்
இவனை நம்பி
இரவுகள் கழிய

கருத்த அறை
வெள்ளை துளிகள்
இணைந்த சூல்
உருவான பிண்டம்

பத்து திங்கள்
பதுங்கி இருந்து
இருளை விட்டு
பிண்டம் தள்ள
விழுந்த இடம்
குப்பை மேடு

அருகில் இருந்த
நாய்கள் கண்டு
கவ்வி இழுத்து
காம்பை நீட்ட

பசித்த பிண்டம்
புசித்த காம்பு
விடாமல் கொண்டு
உறிஞ்சி அருந்த

அயலவர் கண்டு
ஐயோ பாவம்
யாரது பிள்ளை
கூவி
கூட்டம் கூட

நாய்கள் கொண்ட
பாசம் கூட
ஆறறிவான் அற்று
எதிரில் நின்று
எட்டி பார்க்க

கூட்டத்தில் ஒருவன்
கூவி சொன்னான்
பாவி பெத்த பாலகனாக்கும்
குப்பைத்தொட்டி
சேர்ந்து கொண்டான்

குரைத்து ஓடிய
நாயும் சொன்னது
....................
அழும் குழந்தை
அள்ளித்தூக்கி
பசி தீர்க்க மனமற்ற
மனிதன் நீ
மற்றவனை பார்த்து
குரையாதே என்று

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (3-Nov-16, 9:11 pm)
Tanglish : paasam konda nay
பார்வை : 369

மேலே