விரக்தி

வெந்து தனியும் வாழ்க்கையில்
நொந்து தவிக்கும் மனிதன் நான்
வந்து சேர்ந்த வறுமையும்
குந்தவிடவில்லை ஒரு கணமும்

வந்து சேர்ந்த மகராசியும்
எந்த நேரமும் சோர்வுடனே
பெற்று வளர்த்த பிள்ளைகளால்
வெற்றாய் போனது வாழ்க்கையும் தான்

யாரை நொந்து என்ன பயன்
கூரை ஒன்றும் எனக்கில்லையே
சேர்ந்த நட்பும் என்னிடமே
சுரண்டி ஓடிப் போனதே

விதியை நொந்தே தவிக்கின்றேன்
வீதியில் தினமும் அலைகின்றேன்
பாதியில் முடிந்தால் நலமே
மீதி வாழ்வும் வேண்டாமே.!

விஜயகுமார் வேல்முருக

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (4-Nov-16, 12:34 pm)
Tanglish : virakthi
பார்வை : 105

மேலே