தேடுகிறேன்

தேடுகிறேன்

தொலைந்த இடத்தில்
தேடு என்றார்கள்..

கால்களை வருடி
விளையாடிய கடற்கரை
மணலிலும்..

கூட்டாஞ்சோறு தின்ற
கரட்டு மேட்டு
காட்டிலும்..

நுங்கை சக்கரமாய்
உருட்டியோட்டிய
தெருவீதியிலும்..

தலைகீழாய்
தொங்கி ஆடிய
ஆல விழுதிலும்..

திருட்டு மாங்காய்
பறித்து தின்ற
தோப்பிலும்..

தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்த எனது
சிறுவயதை..!

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (4-Nov-16, 9:55 pm)
Tanglish : thedukiren
பார்வை : 74

மேலே