தப்பிய தும்பி தம்பதிகள்
அறிவியற் கட்டுரை:
தும்பியொன்று பட படவென்று தன் கண்ணாடி போன்ற இறகுகளை அடித்தபடி இலையொன்றில் வந்து அமர்ந்தது. சில வினாடிகளில் இன்னொரு தும்பி எங்கிருந்தோ பறந்துவந்து ஒரு ஹெலிகொப்டர் நிலத்தில் இறங்குவது போல் தன் ஜோடிக்கு அருகே வந்தமர்ந்தது. சிறிய தலை, ஆனால் நீண்ட உடல், கால்கள். கண்ணாடியைப் போல் மிக மெல்லிய தடிப்புள்ள இறகுகள். இருபக்கங்களிலும் சமச்சீராக அமைந்திருந்தன. மெல்லிய இறகுகளில் நரம்புகள் தெரிந்தன. கால்களை பாவித்து தனது நிறையை தூக்கிச் செல்லக் கூடிய வல்லமை அதுக்குண்டு. தும்பியின் செயல்பாட்டினையும் உருவத்தையும் பார்த்துத்தான் மனிதன் ஹெலிகொப்டர் என்ற வானூர்தியைப் படைத்தானோ என்னவோ என்றது என்மனம். இயற்கையின் சிருஷ்டியில் தான் எத்தனை மர்மங்கள். மனிதன் கற்கவேண்டிய பாடங்கள் பல. தும்பியை ஆங்கலத்தில் Dragon Fly என்பார்கள். தும்பிகளில் தான் எத்தனை சாதிகள். அதிலிருந்துதான் வெவ் வேறு மனித இன வேறுபாடு பிறந்தனவோ?
******
என் சிந்தனை பறக்கும் பூச்சியினங்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. 350 மில்லியன் வருடங்களுக்கு முன் பூச்சிகள் தோன்றினாலும் அவர்களின் ஆரம்பகால வாழக்கையைப் பற்றிய விபரங்கள் மிகக் குறைவு. பூச்சிகளில் வெகு தூரம் பறப்பன. தத்தித் தத்தி செல்வன, ஊர்வன, போன்ற இயக்கங்களை உடையவை. ஆரம்பகாலத்தில் அவை ஊர்வனவாக இருந்திருக்கலாம். நிலப்புழு, லீச், காரான் எனப்படும் ஊர்வனவை குளிர்ந்த குருதியுள்ளவை ( Cold Blooded) என்பர். தங்களைச் சுற்றியுள்ள சூழல்களின் வெப்பநிலையை அவற்றின் உடல் விரைவில் அடையும் தன்மைபெற்றது. –16 பாகை உறைந்த வெப்பநலையிலும் னுயைஅநளய என்ற பூச்சியானது நடந்துசெல்லக் கூடியது. இப்பூச்சிகள் வெகுவாக வெப்பநிலை மாற்றத்தினால் பாதிப்படையக் கூடியவை. –16 பாகையில் இலகுவாக நடக்கக்;கூடிய பூச்சியினை சாதாரண 30 பாகை வெப்பநிலையில் கையில் எடுத்து பார்வையிட்டால் அதன் உயிர் பிரிந்த நிலையில் அசையாது இருப்பதைத்தான் அவதானிக்க முடியும்.
தம் உடலின் வெப்பநிலையை சூழ்நிலைக்கு எற்றவாறு +48 பாகை வெப்பத்திலும் மாற்றி அமைத்து வாழக்கூடிய பூச்சிகள் தற்கால உலகிலுண்டு. இந்த ஜந்துக்களின் தலை அல்லது தலையையும் உடலையும் இணைக்கும் பகுதி அல்லது உடலின்; வெப்பநிலையை கணிக்கமுடியும். அதை உடல் வெப்பநிலை என்பர். பெரும்பாலும் ஜந்துக்கள் குளிர்ந்த குருpயுள்ள ஊர்வனவற்றிலிருந்து சூடான குருpயுள்ள பறப்பன வரை உண்டு.
37 பாகை முதல் 41 பாகைவரையிலான வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு தம் உடலின் வெப்பநிலையை பூச்சிகளும் பறவைகளும் தம்மை சரிசெய்துகொள்ளும் தன்மைவாய்ந்தன. இந்த இடைவெளிக்கு மேலாகவோ அல்லது குறைவாகவோ வெப்பநிலை மாறும் போது அவை நோய்வாய்படக்கூடிய நிலை ஏற்படுகிறது. தம் உடலின் வெப்பநிலையை சுற்றாடலின் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளமுடியாததே இதற்கு காரணம். பூச்சிகளின் இனப்பெருக்கும் மனிதனின் இனப்பெருக்கத்திலும் பல மடங்கு அதிகம். காரணம் மனிதன் பல வருடங்கள் வாழக் கூடியவன், ஆனால் பூச்சிகளின் வாழ்நாள் சிலகாலமே. பழ இலையான்கள் மனிதனைவிட சுமார் 700 மடங்கு தன் இனத்தை உற்பத்தி செய்யும் தன்மையுள்ளது. ஆனால் அவற்றில் 95 விகிதம் கிருமிநாசினியாலும் , வெப்ப நிலைமாற்றத்தாலும் இறந்துவிடுகின்றன.
நீர் உறையும் வெப்பநிலையிலும் பறக்கவல்ல சில பூச்சிகளுண்டு. பூச்சிகளின் கழுத்தடி முக்கிய பாகமாகும். அவ்விடத்தில் தான் இறகுகளும் பறக்க உதவும் தசைகளும் செயலாற்றுகின்றன. கழுத்தடி வெப்பநிலையை கட்டுப்படுத்துவது பூச்சியின் நிறை, பறக்கும் விதம் ஆகியவற்றில் தங்கியுள்ளது. பூச்சிகள் பறக்கும் விதத்தில் பல இரகசியங்கள் உள்ளடங்கியுள்ளது. இறகுகளில் பல மாற்றங்கள் ஏற்படும். பால் இனச்சேர்க்கைக்கு ஏதுவாக இறகுகளின் நிறம் மாறும். இறகுகளை பட படவென அடித்து ஒலியை எழுப்பி இனச்சேர்க்கைக்கு அழைப்பை சில பூச்சிகள் விடும். தத்துக்கிளிபோன்றவை தம் இனச்சேர்க்கைக்கு தேவையான அழைப்பை ஓசைமூலம் எழுப்புகின்றன. சூரிய வெப்பக் கதிர்களிடமிருந்து தம் உடலைப் பாதுகாக்க வண்ணத்துப்பூச்சிகளும் பீட்டில் என்ற வண்டும் தம் இறகுகளை பாவிக்கின்றன என்பது சில விஞ்ஞானிகள் கருத்து. தம்மை கொன்று உணவாக உண்ணவரும் ஜந்துக்களை ஏமாற்றி தம்மை காப்பாற்றிக்கொள்ளவும் இறகுகளின் வண்ணங்களை மாற்றுகின்றன.
முற்காலத்தில் மீன்களுக்கு கால்கள் இருந்தாக ஒரு விளக்கத்தை விஞ்ஞானிகள் கொடுத்தனர். அவை வாழ்ந்த தண்ணீர் தேக்கங்கள் வற்றியவுடன் வேறு நீர் உள்ள தேக்கங்களுக்குச் செல்வதற்கு அவை பயன்பட்டதென்று கருதப்பட்டது. ஆனால் இந்த விளக்கத்துக்கு ஆதரவு இருக்கவில்லை. ஆரம்பகாலத்தில் பூச்சிகளின் இறகுகள் முழுமையாக செயல்படாது இருந்தன என்றும் அவை வேறு செயல்பாடுகளுக்கு பூச்சிகளால் பாவிக்கப்பட்டதென்றும் உயிரியல் ஆராச்சியாளர்கள் கருதினர். சூரிய வெப்பக்கதிர்களை உள்ளெடுத்து தம் உடம்பை சூடாக்கவும் பால்இனச்சேர்கைக்கு தன் ஜோடிகளுக்கு செய்திகள் அனுப்பவும் பாவிக்கப்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்காலத்தில் இவ்விளக்கத்திற்கு எதிராக பல விதமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தற்காலத்தில், பறக்காத பூச்சிகள் சூரிய கதிர்களை உட்கொள்ளவும் , இனச்சேர்க்கைக்கு அழைப்புகளை அனுப்பவும் தம் இறகுகளை பாவிப்பதில்லை என்றனர். சேர் வின்சென் விக்கில்வேர்த் என்பவர்; இறகுகள் தோன்றுவதற்கு ஒரு புதுமையான விளக்கத்தை கொடுத்தார். நீரின் மேல் வாழும் மேஇலையான் அல்லது கல் இலையான் ( May fly, Stone Fly) போன்றவற்றின் Gills எனப்படும் உடம்பின் பகுதியிலிருந்து இறகுகள் தோன்றியது என்றாhர். நீரிலிருந்து பிராணவாயுவைப்பெற இப்பகுதி உதவுகின்றது. தேங்கி நிற்கும் நீரைவிட அசையும் நீரில் பிராணவாயு அதிகம். அதனால் தேங்கிநிற்கும் நீரின்மேல் உள்ள இலையான்கள் தம் புடைடள என்ற பகுதியின் தசைகளை அசைத்து நீரினை அசையச்;செய்து தமக்கு தேவையான பிராணவாயுவினைப் பெற்றுக்கொள்கின்றன. மிக விரைவாக தம் தசைகளை அசைக்கும் போது நீரினது விரைவாக அசைவதுமட்டுமன்றி பூச்சியை நீரின் மேற்பகுதியில் உந்தி எழும்பச்செய்கிறது. இதுவே காலப்போக்கில் பறக்கக்கூடிய செயல்பாடாக மாறியது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. தற்காலத்தில் உள்ள சுறா, டியூனா போன்ற மீன்கள் தாம் சுவாசிப்பதற்கு மேல்விளக்கியவாறு தம்மை உந்திகொள்கின்றன.
*******
என் உடம்பை ஜில் என்ற குளிர்காற்று தளுவியது. சிந்தனையிலிருந்து விடுபட்ட நான் தும்பிகள் தம்முகத்தை உராய்ந்தபடி முத்தமிட்டுக் கொள்வதைக்கண்டேன். அது நடக்கும் போது இறகுகள் படபடவென்று அடத்துக்கொள்கின்றன. ஒருவேளை தமது உணர்ச்சிகளையும் தமக்கிடையேயான காதல் பேச்சுக்களையும் பரிமாறிக்கொள்கின்றனவோ. அம்மர இலைகளின் மறைவில் இரு தும்பிகளும் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை உணராது ஒன்றையொன்று தழுவியபடி சிற்றின்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இயற்கையில், இது போன்ற சம்பவங்கள் ஏராளம் ஒளிவு மறைவின்றி தினமும் பறவைகளிலும் பூச்சிகளிலும் , மிருகங்களிலும், ஊர்வனவிலும் நடப்பதை காணக்கூடியதாயிருக்கிறது. ஆனால் மனிதனைப் பொறுத்தமட்டில் இச்சேர்கைக்கு சில கலாச்சாரக் கட்டுப்பாடுகள் உண்டு.
இரு பிதுங்கிய விழிகள் அவர்களை கண்வெட்டாமல் பார்த்தபடியே இருந்ததை நான் அவதானித்தேன். மயக்கத்தில் இருந்த அத்தும்பிகள் இரண்டும் அவதானிக்கவில்லை. ஒரு பச்சோந்தி தன் நீண்ட நாக்கை நீட்டி தும்பிகளைத் தனக்கு இரையாக்க தயாராகிக்கொண்டிருந்தது. தன் உடலின் நிறத்தை இலைகளின் நிறத்துக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு தும்பிகளை ஏமாற்றி இரையாக்க திட்டம் போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டேன். என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. கலவியில் ஈடுபட்டிருந்த இருதும்பிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, அவை அமர்ந்திருந்த மரக்கொப்பினை அசைத்தேன். அவ்வளவுதான். அந்த அசைவில் தும்பிகள் இரண்டும் சுயநினைவுக்கு வந்து தமக்கு வர இருக்கும் ஆபத்தை உணர்ந்தன. மறுகணம் எனக்கு நன்றி தெரிவித்து விட்டு பறந்து சென்றன. ஏமார்ந்த பச்சோந்தியின் உருண்டை விழிகள் என்பக்கம் திரும்பியது.
“எனக்குக் கிடைக்க இருக்கும் இரையை கிடைக்காமல் செய்து என்னை பட்டினி போட்டுவிட்டாயே. நீயும் ஒரு மனிதனா“ என்றது அதன் பார்வை. நான் அதன் பார்வையினால் சுட்டுப்பொசுக்கப்படும் முன் அங்கிருந்து ஒரு தம்பதிகளை காப்பாற்றிவிட்டேன் என்ற மனத்திருப்தியுடன் அசைந்தேன். இயற்கையன்னை என்னைப் பாhத்து சிரித்தாள்.
“ ஏய் மனிதா இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது இயற்கை. நீ தொடர்ந்து அவ்விரு தும்பிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பாயா? “ என்றாள்.
நான் பதில் சொல்லவில்லை. ஆங்கிலத்தில் பிரபல்யமான ( Survival of the fittest) சக்தி உள்ளவன் பிழைத்துக்கொள்வான், என்ற வாக்கியம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது. சிரித்துவிட்டு நகர்ந்தேன்.
*******