அறிவாயோ நீ
கனவினழகே......
பட்டாம்பூச்சி பல நிறமாய் பார்த்ததுண்டு;
என் ஒற்றை மூச்சு நீதானென
அறிவாயோ அடி கண்ணே....
உச்சி கதிரது உடலெலாம் சுடும் உணர்ந்ததுண்டு;
உன் பார்வை கதிரது எனை சுட்டதே அறிவாயோ அடி கண்ணே...
கார்மேகம் வருவது தனி அழகாய் கண்டதுண்டு;
உன் கார்கூந்தல் கண்டது நாணியதே
அறிவாயோ அடி கண்ணே...
கானக் குயிலின் குரல் அழகாய் கேட்டதுண்டு;
உன் காந்தக் குரலினில் கானகம் கனிந்ததே
அறிவாயோ அடி கண்ணே...
நதியில் மீன்கள் பலவனவாய் வாழ்வதுண்டு;
உன் விழிமீனையும் தனதாக்க நதி துடிக்குதே
அறிவாயோ அடி கண்ணே...
இப்பூஉலகில் மாந்தர்கள் விதவிதமாய் வசிப்பதுண்டு;
என் பூவழகே உன் வசிப்பால் புவி களிக்குதே
அறிவாயோ அடி கண்ணே...
உலகில் உயிர்வாழ தேவைகளாய் பலவுண்டு;
என் உயிர்வாழ உன் நிழல் மட்டும் போதுமே
அறிவாயோ அடி கண்ணே...