என்பதால்
அன்பே..
காதல் கடலினில் மூழ்கி திளைக்கிறேன்...
கரையாய் நீ வருவாய் என்பதாலல்ல...
கடலே நீ தான் என்பதால்...
துயிலினில் கனவில் மூழ்கி திளைக்கிறேன்...
கனவில் தான் நீ வருவாய் என்பதாலல்ல...
கனவே நீ தான் என்பதால்...
நினைவுகளில் முழுவதும் மூழ்கி திளைக்கிறேன்...
நினைவில் மட்டும் நீ வருவாய் என்பதாலல்ல...
நினைவே நீ தான் என்பதால்...