மூடர் வாழ்க்கை

இரு பிணங்கள்
போகும் பாதையில்
மலர்கள்
தூவுகின்றான்

இரு மனங்கள்
இணைகையில்
மலர்கள் தூவ
மறுக்கின்றன

இறந்த பின்
ஒருவரை
இன்னார் என்று
கதைக்கின்றான்

அவன்
இருக்கும் வேளையில்
அவன் முகம்
பார்க்க மறுக்கின்றன

அன்னையின் மடியிலே
ஆயுளை கழிக்க
ஆசை படுகின்றான்

அன்னை
அவனை பார்க்க
நினைக்கவே
அயல் நாட்டில்
இருக்கின்றான்

முகப்புத்தகத்தில்
நட்பை
பொழிகின்றான்

அருகில் இருக்கும்
அயலவனை பார்த்து
புன்முறுக
மறுக்கின்றான்

தோலை பேசியில்
தொலையில் இருக்கும்
பெண்ணிடம்
கதை இழைக்கின்றான்

அன்புடன்
அருகில் வரும் '
மனைவியே
அடியே என்கின்றான் ....?

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (8-Nov-16, 7:51 pm)
Tanglish : moodar vaazhkkai
பார்வை : 126

மேலே