இன உணர்வு இன்றொரு இம்சை உணர்வோ

மொழியுணர்வால் அங்குமிங்கும்
கிடக்கிறோம்...
நாமெல்லாம்
ஒரே இனமென....!

இனத்திற்கொரு தனித்துவம்
வேண்டுவதால் மட்டுமே பிரச்னை
இலங்கை, மலேசியா போல்....!

வரைபடக்கோடுகளால் மட்டுமே
இணைகிறோம்...
நாமெல்லாம்
ஒரே நாடென......!

வாழ்வாதாரம் பற்றிய பிரச்னை
விஸ்வரூபம் எடுத்தால் தான்
உள்நாட்டுக்குள் கலவரம்
மாவோயிஸ்ட், நக்சலைட் போல்.....!

போராட்டம் தான் வாழ்க்கை என்று
மேலோட்டமாக பார்க்கையில் விபரீதம்;

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோமென
சூளுரைத்தான் மகாகவி;

அதனால் தான் இங்கு ஆளாளுக்கு
அரசியல் செய்கிறார்கள்;
அஹிம்சையினால் சுதந்திரம்
வாங்க முடிந்த நமக்கோ
மறுபடியும் ஆத்திசூடி சொல்லித்தர
இன்னுமொரு காந்தி தான் வேண்டுமோ?

எழுதியவர் : செல்வமணி (8-Nov-16, 7:56 pm)
பார்வை : 118

மேலே