அம்மா

எனக்கு பல் வகை
சாதம் பாிமாறுவாள்
தான் பழைய சாதம்
உண்டு வளருவாள்

நித்தம் ஒரு ஆடையில் நான்
அழகாய் தொியத்தான்
அவள் ஒரே ஆடையை
ஓயாமல் உடுத்துவாள்

என் ஆசைகளை
எழும்பச் செய்து
அவள் ஆசைகள்
அழித்து விட்டாள்

மகிழ்ச்சி என்னுள்
மக்காமல் இருக்க
சலிக்காமல் சங்கடங்களை
தன்னுள் புதைத்து விட்டாள்

எனக்கு உயிா் கொடுத்து
இவ்வுலகை கொடுத்து
அவள் வாழ்வனைத்தையும்
எனக்காகவே கொடுக்கிறாள்

அம்மா! உனக்கு எவ்வழியிலும்
கைமாறு செய்ய முடியாது
நான் என்னென்னமோ செய்தாலும்
நீ செய்ததோடு ஒப்பிட்டால் என்னால்
கையளவும் செய்ய முடியாது

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (9-Nov-16, 3:15 pm)
Tanglish : amma
பார்வை : 514

மேலே