நடந்த கதை
கட்டிய....
மாடு அற்றுப் போகக் கண்டேன்
மனமோ பித்தாய் ஆகக் கண்டேன்
கால்கள் வலிக்க ஓடிச் சென்றேன்
கண்கள் வலிக்கத் தேடிச் சென்றேன்
நாவும் வறட்சி ஆகக் கண்டேன்
மதியை நினைத்து அடித்து கொண்டேன்
மாட்டைத் தேடி மீண்டும் சென்றேன்
ஆற்றுப் பக்கம் நானிறங்கி
ரோட்டுப்(சாலை)பக்கம் பார்க்கச் சென்றேன்
கிட்டவில்லை என்மனமும் விட்டாதியில்லை
முத்திசையில் தேடி விட்டு
நாத்திசைக்கு நான் நடந்தேன்
அங்கே கண்ட காட்சி யால்
மனம் கொண்டது மாட்சி
கண்டுவிட்டேன் செல்வத்தை
எட்டி சென்று நான் அவளை
கட்டிக் கொண்டேன் கன்னத்தோடு
அணைத்துக் கொண்டேன் ஆசையோடு.......