எங்கள் மோடி
ஜன நாயகத்தின் நிஜநாயகன் நீ
எங்கள் மோடி
இந்தியர்கள் அனைவர்க்கும் நீயே
உயிர் நாடி
கள்ள ,கருப்பு ,ஊழல் பணத்தை
தேடி
அதை ஒழிக்க நீ எடுத்த முடிவு
ஓர் அதிரடி
தூய்மை இந்தியா என்ற சட்டம்
உன் முதல்படி
ஏழை எளிய மக்களுக்கு உன் திட்டம்
தாய்மடி
எதிரிகளை அழிப்பதில் நீ ஒரு
கடும்இடி
அவர்களுக்கு அவ்வப்பொழுது தரும்
பதிலடி
நாட்டு மக்களுக்கு இன்பச்
சரவெடி
உலகம் பல சுற்றினாலும் புரியாது
நீ வைக்கும் அடி
உலக அரங்கில் இந்தியாவை உயரற்றுவதில்
பலே கில்லாடி
நாளை பாரதம் மிளிரும்,
வறுமை யாவும் ஒழியும்,
வேற்றுமை மறையும் ,
ஓர் இந்தியா பிறக்கும் ,
என்பதில் ஐயம் ஏதும் இல்லை
இந்த ஓர் நொடி
ஏன் என்றால்
ஒவ்வொரு இந்தியன் இதயத்திலும்
இமயம் போல் இருப்பவர்
எங்கள் மோடி
இந்தியாவை உயர்த்துவதில்
ஒன்று கூடி
உன் வழி நடக்க காத்திருக்கும் இந்தியர்கள்
பல கோடி
என்றும்... என்றென்றும் ....
ஜெய் ஹிந்த்
இவன் ......
ஜீவன்