காகிதப் பூக்கள் மணப்பதில்லை

அவள் அன்று பேசிய
அந்த வார்த்தைகள்
இன்றுதான் புரிகின்றது
அது பாசமில்லை
வெறும் வேசம் என்று......!

கண்கள் கலங்குகின்றன
உயிர் என்னைக் கொல்கின்றது
இந்த ஊமை நெஞ்சிக்காறியின் ஈனச்செயலால்.......!


அவளுடன் அன்று
துள்ளி விளையாடிய
மனம் இன்று அடியோடு மறைந்துவிட்டது
அவள் தந்த
அநியாய அன்பளிப்பால்......!


நான் உனக்காக
வாழ நினைத்தேன்
நீ எவனுககாக்கோ
வாழ விரும்புகின்றாய்
என் பாசத்தைப் புரியாமல்......!


என் உடலைச் சிதைக்கின்றேன்
உன் வேசமான
பாசம் என்னைச் சூழ்ந்துள்ளது
என்பதால்.......!


என் இதயத் துளிகளை
கற்கள் கொண்டு கிழிக்கின்றேன் உன் இரத்த ஓட்டம் ஓடுவதனால்.......!

ஏன்
எனக்கு மட்டும்
இப்படி நடக்கின்றது,
நான் மரணித்தாலும்
நீ மறந்தாலும்
ஊமை நெஞ்சிக்காரி
நீ தந்த பரிசு மட்டும்
அழியாதடி
புரியாத இந்த பாசத்துக்கு......!


பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (12-Nov-16, 10:24 am)
பார்வை : 55

மேலே