இன்பம்

உன்மேல் எழுந்த உணர்வை முதல்முறையாக
உன்னிடம் சொல்லத் துணிவு வந்தது.
உன்னை அறியாமல் கள்ளத் தனமாய்
உள்ளுக்குள் இரசிக்கும் அந்த இன்பத்தை
உண்மையிலும் இழக்க விரும்பாமல்
உறுதியாய்ச் சொல்லத் தவிர்த்துவிட்டேன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (12-Nov-16, 12:22 pm)
Tanglish : inbam
பார்வை : 92

மேலே