வாகை சூடுவோம்

வடித்த கண்ணீரும்
வடிந்த செந்நீரும்
எரிபொருளாய் சேர்த்தோம்
உன் ஆணவம் எரிக்க
அதிகாரமும் அழிக்க....!!!!

துரோகத்தின் வலியும்
வலியின் வலுவும்
வரும் நாளில்
உனக்கு புரியும்....!!!!

துகில் உரித்த
உன்னை உயிரோடு தோலுரித்து
காலணி செய்வோம்....!!!!

கண்ணை கட்டி
பின்னால் சுட்ட
உன் எலும்பு உருவி
கொடிகம்பம் ஒன்று செய்வோம்....!!!!

சிசுக்களையும் சிதைத்த
உங்கள் நரம்பை பிரித்து
எங்கள் கொடி அதில் ஏற்றுவோம்...!!!!

புவி அதிர
நீயும் பதற
மீண்டு வருகிறோம்
மீண்டும் வருகிறோம்....!!!!

எம் படைக்கான
உன்தொடை ஆட
வாகை சூடுவோம்
வஞ்சம் தீர்த்து....!!!!

ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (12-Nov-16, 12:37 pm)
பார்வை : 225

மேலே