இட்லி ஏலம்

பாட்டிம்மா, பாட்டிம்மா நாங்கெல்லாம் வெளியூருக்காரங்க. இங்க இருந்து பேருந்து மாறி சென்னைக்குப் போகணும். எங்கிட்ட 500,1000 ரூபாய் நோட்டுகளாத்தான் இருக்குது. நாங்க நேத்து ராத்திரி சாப்பிடதுதான். எல்லாம் கொலப் பட்டினி. அதனாலதான் நாங்க தேடி அலைஞ்சு உங்க இட்லி கடையைக் கண்டு பிடிச்சு வந்திருக்கறோம். நீங்க தான் எங்க வயித்த நனைக்க இட்லி தரணும்.
#########
தம்பிங்களா நீங்க எல்லாம் என் பாதையோர இடலி கடைக்கு வந்தது எனக்கு பெருமையா இருக்குது. ஆனா நாங் கடையச் சாத்தற நேரம். எங்கிட்ட 18 இட்லிதான் இருக்குது. விவசாய உற்பத்தி கொறைவா இருந்தா வெலை ஏறுதில்லையா அது மாதிரி தான் இட்லி வியாபாரமும். நெலமைக்குத் தகுந்த மாதிரி நானும் வெலைய ஏத்தற கட்டாயத்தில இருக்கறேன். நீங்க பத்துப் பேரு வந்திருக்கறீங்க. அதானல எங்கிட்ட இருக்கற இட்டிலிய எல்லாம் ஏலத்திலே விக்கப் போறேன். கொறஞ்சபட்ச ஏலத்தொகை 5,000/-.
யாரு அதிகத் தொகைக்கு எடுக்கறீங்களோ அவுங்களுக்குத்தான் இந்த பதினெட்டு இட்லியும். 5,000 ஒரு தரம்.
#####
6,௦௦௦
********
6,000 ஒரு தரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃ
8,௦௦௦
ஃஃஃஃஃஃஃஃ
8,000 ஒரு தரம்
ஃஃஃஃஃஃஃ
10,௦௦௦
ஃஃஃஃஃஃஃஃஃ
10,000 , 10,000, 10,000.
10,000க்கு ஏலம் எடுத்தவரு இட்டிலியை எடுத்துக்கலாம். சாம்பாரு சட்டினி இலவசம். பெஞ்சுசுமேல உக்காந்து மேசைமேல இட்டிலிய வச்சுச் சாப்பிடுவதுக்கும் காசு தரவேண்டாம். குடிக்க, கை கழுவத் தர்ற தண்ணியும் இலவசம்.
ஃஃஃஃஃஃஃ
ரொம்ப நன்றி பாட்டிம்மா. உங்க நல்ல மனசுக்கு நூறு ஆண்டுகள் உடல் நலத்தோட வாழணும். நாங்க பத்துப் பேரும் பங்காளிங்கதான். நாங்க இட்டிலியப் பிரிச்சு சாப்பிட்டுக்கறோம். எங்க தங்கறதுன்னு தெரில. பிச்சைக்காரர் விடுதி எங்க இருக்குன்னு சொல்லுங்க. இப்பவே மணி பத்து ஆகுது. அங்க சாப்பிட ஒண்ணும் இருக்காது. இன்னைக்கு அங்க தங்கிக்கிறோம். காலைலயும் மத்தியானமும் அங்க சாப்பிட்டுக்கிறோம். எங்க சொந்தக்கார பையன் ரண்டு வாடகைக் காரு வச்சிருக்கான். அந்த ரண்டு காரும் நாளைக்கு மதியம் மூணு மணிக்கு வரும்.
ஃஃஃஃஃஃ
சரி தம்பிங்களா இட்டிலியத் தின்னுட்டு மகராசனா போயிட்டு வாங்க.

எழுதியவர் : மலர் (12-Nov-16, 8:36 pm)
Tanglish : idli elam
பார்வை : 361

மேலே