அப்பாவிற்கான மகளின் கடிதம்

பொதுவாகவே பார்த்தீங்கன்னா பெண் குழந்தைகள் எல்லாமே அப்பாக்களுக்கு வரம் தான் !!!
பெண் குழந்தைகளுக்கும் அதே தான் அப்பாவால நிறைஞ்ச உலகத்தை தான் அதிகமா விரும்புவாங்க,,, நான் எங்க குடும்பத்துக்கே ஒரே பெண் பிள்ளை அப்பாவோட செல்ல பிள்ள ,,,
கைக்குழந்தையா இருக்கப்ப அம்மாவோட போட்டி போட்டுக்கிட்டு என்னை தூக்கி வச்சிப்பார் , தூக்கத்துல சிரிக்கும் போது அத பாத்தே உலகத்தை மறந்திடுவாரு, பேபி பவுடர் போட்டு விட்டுடு கண்மை பொட்டு நெத்தி நிறைய அம்மா வச்சி விடுவாங்க அப்பா அத பார்த்ததும் எங்கம்மா போலவே இருக்கா நம்ம பாப்பா அப்டின்னு சொல்லுவாராம் ..
யூ.கே.ஜி போறப்ப அப்பா ஆசை ஆசையா வாங்கி கொடுத்த லஞ்ச் பேக், யூனிப்பார்ம் , நான் "அ" எழுதின நோட்டு நடக்க பழகின நடை வண்டி எல்லாத்தையும் பொத்தி பொத்தி வச்சிருக்கார் மனுசன் இப்போ வரை , ஒன்னாவது படிக்கும் போது மிஸ் அடிச்சிட்டாங்கன்னு அப்பா வந்து சண்ட போட்டு என் பிள்ளைய நானே அடிச்சதில்லைன்னு பேசி அப்புறம் வேற பள்ளிக்கூடத்துல சேர்த்தது எல்லாமே மறக்க முடியாத நினைவுகள் தான் ,, சாப்பாடு ஊட்டி விடும் போது நான் "அ" சொல்ல வரும்போது அவரு வாயும் அனிச்சையா திறக்கும் லூசு அப்பான்னு சொல்லி சத்தமா சிரிக்கும் போது என்னையே பாத்து எங்கம்மா போலவே இருக்கான்னுவார் , நான் தூங்க அவரு சொன்ன கதைகள எண்ணினா ஒரு புத்தகமே வெளியிடலாம் அவ்ளோ கதை ,, யானை டீவில பாத்தா உடனே அடம்பிடிப்பேன் யானை வேனும்னு தன்னோட ஆறடி உயரத்த அரையடியா குறச்சு அம்பாரி ஏறச்சொல்லுவார், ஆறாவது படிக்கும் போது பேச்சு போட்டியில முதல் பரிசு வாங்கினப்ப சட்டை பட்டன் இல்லாம வயிறு தெரிய எடுத்த என்னோட போட்டோவ பாத்து சந்தோசப்படுவார் , அ எழுதினப்பவே அறிவாளி என் மகள்னு ஆனந்தமா சொல்லுவார் , அப்பாவுக்கு தெரியாம அப்பா சட்டையில காசு எடுத்து தெரு முனையில இருக்க கடைல வத்தல் வாங்கி சாப்பிடும் போதெல்லாம் அப்பா போல கட்டம் போட்ட சட்டை யாராவது வந்தாலும் கூட ஒரு வித பயம் வந்து போகும் , ப்ராகரஸ் ரிப்போட்ல அப்பா கையெழுத்த நானே போட்டதுக்கு அம்மா அடிச்சப்பக்கூட எனக்காக சப்போர்ட் பண்ணி அம்மாவ அடிக்க விடாம என் நெத்தியில முத்தம் கொடுத்து தோளை தட்டிக் கொடுத்து இதெல்லாம் தப்பு பாப்பான்னு சொன்னவர் , பெரிய மனுசியானப்ப ஏதோ ஓரு வித புது பயம் இருந்தது எல்லாமே புதுசா இருந்தது அப்பவும் அப்பா நெத்தியில முத்தம் கொடுத்து தோளை தட்டிக்கொடுத்து என்னைக்கும் நீ எனக்கு குழந்த தாண்டானு சொன்னவரு , பன்னிரண்டாவது தேர்வில் நல்ல மதிப்பெண்னோடு வெளிய வந்ததும் உனக்கு பிடிச்சத படின்னு ஊக்கம் தந்து நல்ல கல்லூரியிலும் சேர்த்து விட்டார் , நடுத்தர வயது உடன் படிக்கற பையன் காதல் கடிதம் கொடுத்தப்ப அத எப்டி கையாள்றதுனு தெரியாம முழிச்சப்ப பக்குவமா அந்தப்பையனுக்கு புரியவச்சு எனக்கும் ஓரு நல்ல நண்பனா நிறைய ஆலோசனை கொடுத்தார், நல்ல கம்பெனில வேலை நல்ல சம்பளமும் கூட முதல் மாத சம்பளத்துல அப்பாவுக்கு நல்ல டிரஸ் வாங்கிக்கொடுக்கனும் ஆசை நிறைவேறிடுச்சு !!!
அப்பா ரொம்ப நாளா ரொம்ப பழைய சைக்கிள்யே கடைவீதிக்கு போக கஷ்டப்படுறார் அவருக்கு ஓரு நல்ல டி.வி.எஸ் வாங்கிக்கொடுக்கனும் , உண்மையிலே ஒரு கட்டத்துல பொண்ணுகளோட ஹிரோ அவங்க அப்பாவா தான் இருக்காங்க உனக்கு என்ன பா ஆசை என்ன வேனும் கேளுனு கழுத்தை கட்டிக்கிட்டு சிணுங்கீட்டு நாங்க கேட்கும் போது
மெல்லிசான குரல்ல அப்பா சொல்லுவார் உனக்கு சீக்கிரம் கல்யாணம் பன்னி உன் குழந்தைய பாக்கனும்னு எங்களுக்காக உங்க வாழ்கையவே மாத்திக்கிட்டவங்கபா நீங்க உங்களுக்காக நாங்க இத கூட செய்ய மாட்டோமா ,, கண்டீப்பா எந்த அப்பாவும் உங்கள போல இல்ல என் குழந்தைக்கும் உங்கள போல இல்ல உங்கள போல யாராலும் வர முடியாது உங்கள மாதிரி கொஞ்சமாவது பாசம் காட்டுற தந்தை கிடைக்கனும் ,
உண்மையிலே தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்களின் அன்பின் முன் ....

எழுதியவர் : க.நாகராணி (12-Nov-16, 11:13 pm)
சேர்த்தது : நாகராணி
பார்வை : 1806

மேலே