சம்மதித்த பின் தாமதிப்பேனடி
அன்னையின் பார்வைக்குப் பயந்தே தலையாட்டிய உன்னை.... கடைக்கண்ணால் பார்த்து கண்ணடித்தேன் நானுனை
பெண் பார்க்க வந்த வேளை...!
வாழ்நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் நான்....
அழகு மருமகளின் நினைவில்
என் அன்னை...!
நாட்களோ உருண்டோடுகின்றன வேகமாய்....
திருட்டுத்தனமாய் மணிக்கணக்கில் பேசியே ஓய்கின்றன எம் அலைபேசிகள்.....!
ஏக்கத்தில் தினமும் என் இதழ்கள் காய்கின்றன முத்தங்களின்றி
நிராகரிக்கப்படுகின்றன உன்னால்
என் முத்த ஆசைகள்...!
காதில் ஒலிக்கு வேண்டும் பலமுறை திருமணமோ நாளையென்று...
இவளோ நாளை என் மனைவியென
கர்வத்தோடு அவளிடத்தே
சென்று கொடுப்பேன் அவளுக்கு
பெரும் ஏமாற்றத்தை....!
இரு மனங்களும் ஒரு மனமாய் தனிமையில்...
நீயோ முத்தமிட சம்மதித்த பின்
நானோ தாமதிப்பேனடி
காத்திருப்பிலுள்ள சுகத்தை அடைய!!!