என்னை விட்டுத் தள்ளிப் போகாதே-மூன்றாம் பகுதி

கற்றுக் கொண்டேன் உன் பிரிவினை ஏற்க
விட்டு விட்டேன் உன் பின்னாலே சுற்ற
முன்னாலே தெரிகின்றாய் கண்ணாடியில்
எனது பிம்பமாய்!!
ரணமாய் .கொல்கிறது மனமே
பிணமாய் கிடக்கின்றேன்
உன் மூச்சுக் காற்றைக் சுவாசிக்காமல்
நீரிலிருந்து வெளியே வரும் மீனைப் போல
முப்பழச் சாறின் அமுதமே!!
சேறாக மாறுகிறேன்
நேராக உன் கால் என் மீது படட்டும் என்று
தேராக மாறுகிறேன் திருவிழா
அன்று ஊர்வலமாக
உன்னை தூக்கிச் செல்ல
காற்றடித்தாலும் சரி
கிளைகள் அசைந்தாலும் சரி
வேறாக மாறுகிறேன் உன்னை
தாங்கிப் பிடிக்க என்றும்
என்னை விட்டுத் தள்ளிப் போகாதே!!!!!

எழுதியவர் : சரத் குமார் (13-Nov-16, 9:24 pm)
பார்வை : 176

மேலே