♡♡ஒரு காதல் கடிதம்♡♡

அன்பே! உன் காதல் கன்னியள் கவலையை தீர்ப்பாயோ...
என் உயிரில் பாதியாய் கலந்தவனே
தனிமையில் நானோ வாழ்கின்றேன் இன்று உயிரற்றபிணமாய்..!

மன்னவனே உன் ஆயுளுக்காய் நானோ...
பூஜிக்க செல்கிறேன் தினமும் கோவிலுக்கு...!

காதலின் சுகம் பிரிவில் இல்லையடா
தினம் தினம் வாட்டுகிறது என்னை
நம் காதல் நினைவுகள்...!

கண்ணீர் வடிக்கின்றன நாம் அடிக்கடி சந்தித்த பூங்காக்கள்...
மாலையில் செல்லும் திரையரங்கோ
ஏங்குகிறது எம் வருகையை
எதிர்பார்த்து..!

நீ தந்த முத்தங்களே உயிர்ப்பிக்கிறன என்னை....
நானோ காத்திருக்கிறேன் ஆவலுடன் உனைச் சேரும் நாளுக்காய்...
கவலையற்று இருடா என் ஆருயிரே!!!

♤♤சி.பிருந்தா
மட்டக்களப்பு ♤♤

எழுதியவர் : சி.பிருந்தா (14-Nov-16, 12:08 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 90

மேலே