கேள்வி

கணிதத்தைக் கிறுக்கி கசக்கி எறிந்த
காதிதத்தாட்கள் என்னிடம் கேட்டன,
“தூக்கி எறியும் உணர்வுகளின்
நினைவுகளைச் சுமக்கும் எழுத்துகள்
பொன் ஏட்டில் துயில!
உன்னைத் தூக்கிவிடும் எழுத்துக்களை
குப்பையில் எறிவது நியாயமா?”என்று

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (15-Nov-16, 12:10 pm)
Tanglish : kelvi
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே