என் ஆசை மேகங்கள்
ஓயாமல் அடிக்கும்
கடலலை போல்
சீறுகின்ற எரிமலையாய்
கனன்று கொண்டிருக்கிறது
வெளிக் கொணராத
உருவத்தின் கோபமுகம் ,,,,,
எளியவர்களை கண்டு
எள்ளி நகையாடும்
வலியவர்களை
கொன்று புதைத்திட்ட ஆசை ,,,,
அடிமை நிலையிலிருந்து
வளர்ந்ததை மறந்து
உயர்ந்தவன் என்ற
அகந்தையில்
எள்ளி நகையாடுகிற
உயர்ந்தவர்களை
கொன்று புதைத்திடவே ஆசை ,,,,
பிறப்பிலும் ஊழல் ,,!
இறப்பிலும் ஊழல் ,,!
எச்சத்தின் மிச்சமான
கழிவிலும் ஊழல் ,,,!
ஊழல் முகத்தை மறைத்து
ஒன்றுமில்லாதவன் என்ற
போலிமுகத்தை கிழித்து
அவன்தன் குருதியில்
குளித்திட ஆசை ,,,,
என்னுளம் கண்டு
இன்சொல் பேசி
பிறனுளம் கண்டு
நரிவேலை செய்யும்
நாடக நண்பர்களை
வேட்டையாடி
உண்டு மகிழ்ந்திட ஆசை ,,,,,,
உள்ளது உள்ளபடி
சொல்லி வைத்தால் நல்லதடா
காட்சி பொருள் என்று
கல்லெறிவது
நட்புக்கு தகுந்ததடா ,,,,!
கலியுகத்தின்
களி ஆட்டமிதை
பாராயோ கண்ணா ,,,,,
அவர்தம் கிலி கொண்டு
கிளித்தெரிய
வாராயோ கண்ணா ,,,,!
.

