காதல் தோல்வி
நிலவுப் பெண்ணே
மேகத்திரைக்குள்
முகம் புதைக்காதே !
என்னவளின் ஒளியுடைய
விழிகளை எதிர்கொள்ள
இயலாமல் ....!
அலையே ,
அலைபாயாதே !
அலைபாயும் இவள்
கூந்தலோடு போட்டியிடும்
அருகதை நமக்கு
இல்லையே என்று !
மழையே நீ
மதி மயங்கிவிடாதே !
இத்தனை அழகும்
எனக்கா சொந்தமென்று !
நான் நம்பி சென்றேன்
அவளை நாடி...!
அவள் தந்து சென்றாள்
முகத்தில் தாடி ?
மழையே !
இதோ நானும்
தயாராகிவிட்டேன்
உன்னைப்போல்
கண்ணீர் சிந்த............!