என்னை தெரியும்

எனது பெயர் தனம்
நான் ஒரு இயந்திரம்

பொய்யான உலகமே...!
இதை கேள்.

நான் என்பதை மறந்து !
என்னையே நான் இழந்து !
அலைந்து, திரிந்து,அமர்ந்து !
பலரும் என்னை கண்டு வியந்து !

பல பொய்களை கூறி
பல படிகளை ஏறி
இன்று உந்தன் முன்

ஒரு நிராயுத பாணியாக
நிற்கிறேனே...
என்னை தெரியவில்லையா உனக்கு?

பொய்களை நிஜங்களாக்கும் வித்தகம்
தெரிந்தவன் நான்

என்னை பழுது பார்க்கும்
இயந்திரம் கோடி கோடியாய்
பதுக்கிகிறது பணத்தை ...
என்னை இயந்திரமாய் கொண்டு....

எனது பெயர் தனம்
நான் ஒரு இயந்திரம்...

எழுதியவர் : அன்புடன் பிரசாந்த் (15-Nov-16, 4:54 pm)
Tanglish : ennai theriyum
பார்வை : 104

மேலே