மூணார் குதூகலக் குளிர்
மூணாரில்
நண்பனுக்கு நண்பன்
கைகொடுத்து
வரவேற்றான்...
குளிரும் பனியும்
உடல் தொட்டு
வரவேற்றன...
போடிநாயக்கனூர் வரை
காரில் ஏசி கேட்ட தேகம்
மூணாரில் ஸ்வெட்டர்
கேட்கிறது...
மலை அழகு... அது
மலை அளவு...
இந்த மேகக்
காதலனுக்குத்தான்
எத்தனை சுயநலம்...
மலைக் காதலியைக்
காமிராவுக்குக்
காட்டாமல் தனக்கு
மட்டுமே எனச் சொந்தம்
கொண்டாடுகிறது...
அவ்வப்போது பெய்யும்
மழைக்கும்...
எப்போதாவது அடிக்கும்
வெயிலுக்கும்
பலத்த போட்டி
மலை தழுவுதலில்...
மழைதான் ஜெயிக்கிறது
பல நேரங்களில்...
👍😀