நகைச்சுவை- சிரிக்க-சிந்திக்க -தங்கமணி-அன்புமணி உரையாடல்

அன்புமணி-தங்கமணி வெட்டிப்பேச்சு
---------------------------------------------------------------

அன்புமணி : டேய் தங்கமணி, இன்ன பேப்பர் பாத்தாயா

தங்கமணி : அதைதான் பார்த்துகிட்டு இருக்கேன் அண்ணே
எதாச்சி விசேஷ செய்தி உண்டா அண்ணே

அன்புமணி : கொஞ்சம் அந்த ஐந்தாம் பக்கம் புரட்டு
பார்க்கலாம் .............

தங்கமணி : அண்ணே, ஒரு பக்கம் முழுக்க யாரோ
பெரியப்புள்ளி பொண்ணு திருமணமாம்
ஐநூறு கோடி ரேஞ்சுல செலவாம் ..........
இன்ன நெலவரத்துல இது எப்படி சாதியம் அண்ணே
கருப்பு பணமுனா ஆசாமி மாட்டிப்பாரே !

அன்புமணி : அங்கதான் தம்பி விசேஷம்

அவரு, எல்லா செலவையும் வாங்கி செக் மூலமா
செட்டில் பண்ணறாராம் அடுக்கு கேஷ் தேவ இல்லையே
அந்த ரேஞ்சு கல்யாணத்துக்கு ...............
அதாண்டா செக்குவெச்ச கல்யாணம்
பெருமனுஷங்க செய்யற கல்யாணம் ...
திருமணம் ஆன பிறகு , வருவதை பாத்துக்கலாமுன்னு !
எப்படி இவங்க பிளானு...............

தங்கமணி : ஓ இப்படியும் சாத்தியமா ?
பாவம் நம்ம செல்லமணி, நாலா நடக்கும் பொண்ணு
கல்யாணத்துக்கு கையில் கடனாய் வாங்கி வெச்சிருக்கும்
ரெண்டு லக்ஷம் பணத்திற்கு , மாத்தமுடியாமா
பைத்தியமாய் அலையறாருங்க

அன்புமணி : அப்படியா ஐயோ பாவம் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-16, 11:07 am)
பார்வை : 319

சிறந்த நகைச்சுவைகள்

மேலே