காதல் தொட்டனைத்து தூறும் தொடத் தொடப் பரவசமே
காதல்
தொட்டனைத்து தூறும்.
தொடத் தொடப் பரவசமே !
×××××××××××××÷×÷÷÷÷÷÷××××
காமன் கணை தொடுத்து
காமம் என்னைத் தொட்டு
கனவில் இளம் வயதில்
காதல் தொடு வானமே
காமன் கணை தொடுத்து
காலத்தில் உன்னைத் தொட்டு
காமம் மொட்டு கனியைத் தொட்டு
காதல் கணை தொடுத்தப் பெண்ணே
காமன் கணை தொடுத்து
காதல் நம் மனதைத் தொட்டு
கண்கள் காதல் தொடுத்து
கைகள் தொடுக்க நினைக்குதே!
குழந்தையோ தன் தாயின்
குலவும் தாலாட்டுக்கு ஏங்கும்
கூவும் என் நெஞ்சமோ உன்
பூவிதய ஒலி கேட்க தேம்புதே
நெஞ்சத்தில் தஞ்சம் கொள்ள
மஞ்சத்திலே தொடுத்துக் கொள்ள
மனம் கனவிலும் முகம் தேடுதே
மனசோ நெஞ்சை தொடத் தாவுதே
தொட்டனைத்து தூறும் மலர் மேனி
தொடுக்க அறிவார் தொடக் களிக்குமே
தொடுமின் வடியும் கனி ரசமே
தொடத் தொடக் காதல் பரவசமே