காதல்

உன்னை நான் கண்டது முதல்
என் உள்ளம் உன்னையே நாடுது
ஏன் என்று தெரியவில்லை
நீயோ இன்னும் பாராமுகமாவே
இருக்கின்றாய்

சொல்லிடுவாய் நான்
என்னதான் செய்திடல் வேண்டும்
உன் காதலனாய்
நீ என்னை ஏற்றுக்கொள்ள

ஓங்கி எழுந்திடும்
அந்த கடல் அலைமீது ஏறி
வானைத் தொட்டு வரவா
இல்லை அங்கு
வெண்ணிலவைக் கண்டு
எனக்காக உன்னிடம்
தூது செல்வாயா என்று
கேட்டு வரவா

உனக்காக கண்ணே
நான் தலையால் நடந்து
அந்த இமயத்தின்
உச்சியை தொட்டு வரவா
சொல்லு

இல்லை இதோ
எங்கு முடியும் என்று
வளைந்து போகும்
கியூ வில் நின்று
உனக்காக உன்
செல்லா ஐநூறு ,ஆயிரம்
ரூவா நோட்டுகளை
அந்த வங்கியில்
மாத்தி தரவா சொல்லு


காலம் தாழ்த்தாதே பெண்ணே
எனக்காக கொஞ்சம்
இறங்கி வந்திடலாமே
என்னிடமும் நீ நினைக்கும்
எல்லாம் உண்டு

அழகுண்டு, படிப்புண்டு
பண்புண்டு, பணிவுண்டு
உழைக்கும் கைகளுண்டு


உனக்காக காத்து நிற்கும்
என்னை கொஞ்சம்
உன் தாமரைக் கண் திறந்து
பாராய்
நான் தான்
நீ நினைக்கும்
உன் காதலன் என்று
உன் கண்ணால் கூறிடுவாய்
அது ஒன்றே போதும்

அதுவரை உனக்காக
என்ன செய்தால்
நீ என்னை ஏற்றுக்கொள்வாய்
என்று கூறிடு
வனிதா மணியே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-16, 10:35 am)
Tanglish : kaadhal
பார்வை : 193

மேலே