சென்னை

உருவாக்கியவர்
உருவிழந்தார்
உருவான நானோ
உருமாரிக் கொண்டே!

படைத்தவன் இட்ட பெயர்
பள்ளத்தில் புதைந்தது
வந்தவன் இட்ட பெயரும்
வழக்கொழிந்து போனது

இன்றைக்கு இருக்கும் பெயர்
நிலைக்குமா நானறியேன்
ஆனால் என்றைக்கும்
நானிருப்பேன் வழி வழியாக!
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (17-Nov-16, 12:22 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : chennai
பார்வை : 316

மேலே