வலிகள் வார்த்தைகளாக
நீயும் நானும் சேர்ந்து
நடந்த பாதையில்
இன்று என் கால்தடம் மட்டும்
எங்கே உனது பாதச்சுவடுகள்
அது வேறொரு பாதையில்
வேறொரு கால்களுடன்.....
உனது புன்னகையை
தானே நேசித்தேன்
எனக்கு கண்ணீரை
பரிசளித்தது ஏனோ ?
உன் மனைவி என்ற
அந்தஸ்தை தானே கேட்டேன்
நீயோ திருமணத்திற்குமுன்பே
விவாகரத்து தந்தது ஏனோ ?
உன்னோடு நடந்த நாட்களில்
தார்சாலை கூட
பூஞ்சோலையாய் தெரிந்தது
இன்று என் தனிமையோ
பூக்களில் கூட
முட்களை மட்டுமே பார்க்கிறது .....
என்னை வெறுப்பதற்கு
ஆயிரம் காரணம் சொன்னாய்
உன்னிடம் என்னை விரும்புவதற்கு
ஒரு காரணம் கூட
இல்லாமல் போய்விட்டதோ ?
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் கண்களுக்குள் வேர்க்கிறது
ஒவ்வொரு நொடியும் ஏங்குகிறேன்
உனது பழைய பாசபார்வைக்காக ......
நீ சொன்ன
காரணங்களும் கதைகளும்
என் அறிவுக்கு
எட்டிவிட்டது ஆனால்
உன் கொஞ்சல் மொழியையே
கேட்டு பழகிவிட்ட
இதயமோ அதை ஏற்க மறுக்கிறது ....
மறுஜென்மத்திலெல்லாம்
எனக்கு நம்பிக்கை இல்லை
ஒருவேளை இருந்தால்
அப்பொழுதும்
உன் மனைவியாகும் வரமே வேண்டும்.....
அதுவரையிலும்
காத்திருக்கிறேன்
அன்பே உனக்காக
உன் அன்பிற்க்காக ....
காதலோடு வா .....