சுவரில்லா சித்திரங்கள்

(அழுகின்ற ஓர் ஆதரவற்ற குழந்தையின் அவலக்குரல் )
இறைவன் கருவில்
உரு கொடுத்தான்
அம்மா நீயோ
என் உருவிற்கு
உயிரளித்தாய் ......

இரு ஐந்து மாதங்கள்
கருவோடு என்னை சுமந்தது
இந்த அனாதை இல்லத்தில்
தத்துக்கொடுக்கத்தானா ?

உயிரளித்த நீ
எங்கோ இருக்க
உயிருள்ள பிணமாய்
நான் இங்கிருக்கிறேன் ......

அம்மா
வறுமையால்
என்னை விட்டுசென்றாயோ ?
இல்லை
வாழ வழியில்லாமல்
விட்டுசென்றாயோ?

என்னை சுமையென
எண்ணி விட்டுசென்றாயோ ?
இல்லை
உன் சுதந்திரத்திற்க்காக
விட்டுசென்றாயோ?

நான் உனக்கு துன்பமென
எண்ணி விட்டுசென்றாயோ ?
இல்லை
நான் இங்கிருந்தால் தான்
இன்பமென எண்ணி விட்டுசென்றாயோ ?

தெரியவில்லை
அம்மா எனக்கு
ஆனால்
எங்கோ சுமைகளுடனோ
இல்லை
சுதந்திரமாகவோ நீ
இங்கோ சுவரில்லா சித்திரமாய் நான் .......

எழுதியவர் : மோனிஷா.A (18-Nov-16, 11:29 am)
பார்வை : 140

மேலே