உறவுகள் கற்று கொடுத்த பாடம்

உறவுகள் பல ஆயிரம்
இப்பூவுலகில்...
கண்டேனடி அப்பா அம்மா
அண்ணன் தங்கை
அக்கா என மூலை
முடுக்கு களில் பொத்து
கொண்டு வருமே
ஒரு ஆணும் பெண்ணும்
இணையும் திருமண
பந்தத்தில்...
மனைவி என்று ஒருத்தி
வந்த பின்னே தெரியுமே
முதலில் சொந்த
பந்தத்தின் சுயரூபம்...
எத்தனை பேர் தான்
பாசமிகு உறவை
மதிக்கின்றனரோ இல்லையோ
வங்கியில் சேமிப்பு இருக்குமே
சொந்த பந்தத்தின் பாசமும்
வார்த்தையும்...