பாட்டி-பேத்தி-ஜிம் ஒரு உரையாடல்

பாட்டி பேத்தியிடம் உரையாடல்
-----------------------------------------------------

பாட்டி ( பேத்தி பத்மினி இடம்) : எண்டீமா, பத்மினி எங்க போய்ட்டு வர்ரப்போல
இந்த காலை வேளைல, ஜீன்ஸ் ம் டீ ஷேர்ட்டுமா

பேத்தி (பத்மினி) : பாட்டி , ஜிம் கு போய்ட்டு வர்றேன்
ஆபீஸ் ல சொல்லறீங்க கொஞ்சம்
இடுப்புக்கு கீழ வெயிட் போட்டுருக்குனு
அம்மா வேற அடுத்த மாசம் பொண்ணு பாக்க
வர்ற போறாங்கன்னு சொல்லறீங்க அதான்
பாட்டி கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன் ...........

பாட்டி : ஆதி என் செல்லமே , உன் பாட்டி என்ன பாரு
எழுபத்திரண்டு வயசு ஆறது ....... பெருமைக்கு
சொல்லிக்கல......... ஏழு குழந்தை பெத்துண்டு
எல்லாத்தையும் கடைத்தேதி விட்டாச்சு .....
இன்ன வரைக்கும் இருபதில் இருந்த மாதிரியே
வெட வேடானு , ஆனா குருவிபோல சுறுசுறுப்பா
இருக்கேன் பாத்தியா ................எப்படி இது
சாதியம் ............

பேத்தி : பாட்டி எப்படி சொல்லுங்க பார்ப்போம்

பாட்டி : வீட்டு வேல எல்லாம் நானே செய்வேன்.
ஆட்டு கல்லுல மாவாட்டுவேன், அம்மியில்
மசாலா அரைப்பேன், உரலில் நெல்லு குத்துவேன்
வீட கூட்டி அலம்பிவிடுவேன்,மாட்டுக்கு தீனி
வைப்பேன், பின்ன தோட்ட வேல செய்வேன்......
கொஞ்சம் ரெஸ்ட் , தமிழ் நாவல் படிப்பேன்,
கவிதை எழுதுவேன் ................இப்படி
சுறுசுறுப்பாய் இருப்பதாலே இன்று வரை
நோவு நொடி அண்டல, தலை நிறைக்கல,
உடம்பு எடை போடல ..................இதுக்குமேல
ஒரு பொண்ணுக்கு என்ன வேணும் ...........

ராஜாதி, இந்த ஜிம் கிம் இதெல்லாம் வேணாம்
பேசாம நான் சொல்லறதை கேளு சுக்கா
எழுச்சி, சிங்காரியா இருப்ப ......சேர்த்து, தென் po

பேத்தி : சொல்லுங்க பாட்டி ...........

பாட்டி : நாளை முதல் உன் அம்மாக்கு ஒத்தாசை பண்ணு
இம்மாம்பெரிய வீட்டுல எவ்ளோவோ வேலைகள்
இருக்கு எடுத்து நீயே செய் -லீவு நாள் ல தோட்ட
வேல பண்ணு ............காலைல இஞ்சி நீர்லசிறிது
எலுமிச்சை சாறு சேது, தென் விட்டு குடி......
இந்த ஜிம் எதுவும் பொம்பளைக்கு தேவ இல்ல
ஒரு மாசத்துல எப்படி ஆற பாரு...........


பேத்தி :பாட்டி இதுக்கு நான் அந்த ஜிமிக்கி போறது மேல்

பாட்டி : அடியே நல்லது எப்போதும் எடுபடாது......ம்............ம்.

பேத்தி : போங்க பாட்டி .................




.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Nov-16, 6:37 am)
பார்வை : 438

சிறந்த நகைச்சுவைகள்

மேலே