உரிமையும் சலுகையும்

உரிமையும் சலுகையும்
துலாக்கோலின்
இருதட்டு...
ஒன்று ஏற
ஒன்றை தாழ்த்தியே
தீரவேண்டும்!
உரிமையும் சலுகையும்
காத தூரத்தின்
இரு கிளை பாட்டை...
ஒன்றில் பயணிக்க
ஒன்றை தவிர்த்தே
தீரவேண்டும்!
உரிமையும் சலுகையும்
தேனும் தேநீரும் போல...
இரண்டையும் ஒரு சேர
பருகிட முடியாது!
உடல் வாழ்வது
சலுகையில்...
உயிர் வாழ்வது
உரிமையில்...
உடலும் உயிரும்
பிணைந்தது போல
உரிமையும் சலுகையும்
இணைந்ததில்லை
உண்மையில்....!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (19-Nov-16, 11:35 am)
Tanglish : urimaiyum salugayum
பார்வை : 58

மேலே