செல்லாக் காசு

அக்கம் பக்கம் வீட்டினருடன் -
அன்பை செலுத்த மறுக்கிறாய் ;
ஆதரவும் இல்லாமல் -
அநாதை போல் நிற்கிறாய் !

சேர்வார் தோஷம் அத்தனையும் -
செய்நன்றி மறப்பதால் ;
சேர்த்த பெயர் எல்லாமே -
செல்லா காசாய் ஆனதே !

மனிதர்களை சேர்க்க மறந்து -
மமதையில் நிற்பதும் ;
மாற்றம் வரும் வேளையில் -
மௌனமாக நிர்ப்பதேன் ?

நாணயத்தை மறந்ததாலே -
நல்லபெயரும் உனக்கில்லை ;
நலிவுற்ற நாட்களிலே -
நாதியற்றும் நிர்ப்பதேன் ?

வழி தவறி வந்த பணம் -
வசந்தத்தையும் தருகுதே ;
செல்லாது என்ற போது -
செய்வதறியா நிர்ப்பதேன் ?

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (20-Nov-16, 1:58 pm)
பார்வை : 166

மேலே