காசு பணம் துட்டு மணி மணி
சிறுவாடு பணமெல்லாம்
தெருவோடு வந்தாச்சு
அரும்பாடு பட்டு சேர்த்தவன் பாடு
பெரும் பாடு ஆயாச்சு
தின்னு கொழுத்தவன்
தேசம் தாண்டி போக விட்டாச்சு
இன்னும் வேணும் வேணும்னு சேர்த்தவன்
பணமெல்லாம் டாலடிக்குது டாலரா
மாட மாளிகையும்
வெள்ளையும் சொள்ளையும்
ஒண்ணையும் காணல
ஏ டி எம்வரிசையில
வரிசையில் நிக்கும்
உன் காதுலயும்
என் காதிலும்
தாமரைப்பூ இருக்குது பாரு
இலையோட...!
கருவரைக்கும் காசு இல்ல
கல்லறைக்கும் காசு இல்ல
திருவோட்டுக்கும் சில்லறை இல்லை
கழனி வித்து காசு வச்சவன்
பிள்ளை படிப்புக்குச் சேர்த்து வச்சவன்
செத்தா தூக்கி போட
செலவுக்கு சேர்த்து வச்சவனெல்லாம்
செல்லாத காசோடு மல்லுக்கட்டுறான்
மலையை முழுங்கின
மல்லையாவும் செல்லையாவும்
எந்த கடற்கரையிலே மல்லாந்து காத்து வாங்குறானோ நாட்டுல..!