வழித்துணையாக நான்
அன்பே
எதிர்பாரமல் தொடங்கிய என்
வாழ்க்கை பயணத்தில்
எதிர்பாரமல் என் எதிரே
ஏனோ தோன்றினாய்!
உன்னை கண்ட நொடியில்
இருந்து வாழ்க்கை பயணத்தை
பாதியில் விட்டு
வழிபயணத்தினை
தொடங்கினேன்
உன்னுடன்!!,
அழகே
விரல்களை மட்டுமே தீண்டி
உன்னுடன் வரவேண்டும்
என்று நினைத்தேன்!
ஆனால்
நீ விழிகளால் சிறைசெய்து
விட்டாய்!!!,
அன்று காதலால் உன்னை
பின்தொடர்ந்து வந்தேன்
ஆனால் இன்று
உன் காலடிகளை
பின்தொடர்கிறேன்!!!,
என்றும் பாதைகளை மட்டுமே
பார்த்து செல்லும் நான்
இன்று
உன் பாதங்களை மட்டுமே
பார்த்து வருகிறேன்!!!!!,
பெண்ணே
பகலிலும் பனிகாற்று வீசுதடி
நீ என் பக்கத்தில்
இருக்கும் போது!!!!!!,
இனியவளே
இயற்கையும் உன்னை
கண்டு வியக்கின்றதடி
இவள் எத்தனை
அழகு என்று!!!!!!,
உயிரே
உன் வருகையை கண்டு
வாகணமெல்லாம் வழிவிட்டு
செல்ல,
நீளும் நெடுஞ்சாலை எங்கும்
இந்நினைவுகள் என்னை
பின் தொடர்ந்துவர ஆசையடி!
உன் வழித்துணையாக வர
மட்டும் அல்ல!!
வாழ்க்கை துணையாகவும்...