கடலழகை விழுங்கிடும் அழகழகே

கொச்சியின் கடல் மட்டுமல்ல
உலகின் எக்கடலும் என்ன அழகு ?

திரைக்கடலாய் திகழ்ந்திடவே
திவலைகளால் ஆன இத்திடலும் என்ன அழகு ??

தாண்டித் தாண்டியே தீண்டித் தழுவியும்
தீரா வேட்கையில் மாறா
நின் சுவாசத் தீண்டல்போல்
மீண்டும் மீண்டும் தாண்டியே, தீண்டிடத் தூண்டிடும் கரையும் என்ன அழகு ??

அவசரகதியினில்,அஸ்தமனத்தினை ஆட்படுத்தி, தன்னிடமான மொத்த குளிரினையுந்திரட்டியே...
அலைகளை ஆசிர்வதித்திடும் நின் தளிர் பாதங்களை வெல்ல
மெல்ல வெளிவரும் வெள்ளிப் பிறையும் என்ன அழகு ??

ஆர்பரித்தும், ஆக்ரோசித்தும் அமைதியாகியும் என
பன்முக தன்மையுடன் திண்மையாய்
நிதம் அலையாடி விளையாடி
நின் பாதம் தீண்டியே சாபல்யம் பெறும்
அலையும் என்ன அழகு ??

அரபிக்கடலின் அரசி யென
பட்டப்பெயரினில் அனைவராலும் அழைக்கப்பட்டபொழுதும்
அடையா ஆனந்த அத்வைதம் அதை
அழகே , தன் அலைகரங்களால்
உனை ஆராதித்ததும்
அத்தனை ஆனந்தமடைந்திடும்
அந்த நிலையும் என்ன அழகு ??

எழுதியவர் : ஆசை அஜீத் (21-Nov-16, 8:47 pm)
பார்வை : 311

மேலே