வாசலில் பௌர்ணமி
கதிர் மலரும் காலை வேளையில்...
நதியின் அலைகள் மீட்டும் இசையில்...
சுதிகள் சேர்த்து குயில்கள் பாடுதே...
வீதியின் விளக்குகள் கண்களை மூடுதே......
தென்றல் தவழ்ந்து பூக்கள் சிரிக்க
தேன் வண்டுகள் பூக்களில் மொய்க்க
தடாகத்தில் நீரெடுத்து தரையில் தெளித்திட
தங்க சிலையொன்று மிதந்து வந்ததே......
பொற்கரத்தின் விரல்களில் விண்மீகள் ஒளிர்விட
பொன்னெழில் மேனியில் செம்முகில் துகிலிட
கிண்ண மேந்தி மாக்கோலம் போடுதே...
மண்ணு மின்று மணிமகுடம் சூடுதே......
மூப்பெருந் தேவிகள் கலந்த கலவையோ?...
மூவுலகிலும் இல்லாத அழகியிவளைப் பார்த்து
தேகத்தில் ஓடுமென் நரம்புக ளெங்கும்
தாகமெடுக்க இமைகள் திறந்து பருகுதே......
மோகத்தை விதைக்கும் நாயகியிவள் சிவகாமியோ?...
மேகத்தைக் கிழித்து வந்த பௌர்ணமியோ?...
விண்ணுலகமே தரையிறங்கி வந்து விட்டதோ?...
வியப்பில் விழிகள் இமைக்கவும் மறந்ததே......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
