நல்ல சலுகை

போலீஸ் : MR .உங்கள கைது செய்கிறோம் ...

ஒருவர் : எதுக்கு நான் என்ன செய்தேன் ...

போலீஸ் : கள்ள நோட்டு வெச்சிருந்ததற்காக உங்கள கைது செய்கிறோம்...வாங்க போலீஸ் station க்கு ..

மற்றொருவர் : போலீஸ் சார் அவரு கள்ள நோட்டு வெச்சிருந்தாருன்னு எப்படி கண்டு புடிச்சீங்க ...

போலீஸ் : bank ல போய் மாத்துறதுக்கு நேரமாகும் என்னிடம் வாருங்கள் உடனே உங்களுக்கு 100 நோட்டாக மாற்றித்தருகிறேன்னு எல்லார்கிட்டயும் 1000 வாங்கிட்டு 100 ரூபா கொடுத்திருக்கார் ....

மற்றொருவர் : அதெப்படி சார் நீங்க கண்டு புடிச்சீங்க ...

போலீஸ் : அட நீங்க வேற அரசாங்கம் 500 ரூபா 2000 ரூபா மட்டும் தாங்க மாற்றினாங்க அத தெரியாத இவன் 100 ரூபாவும் புது நோட்டா அடிச்சி குடுத்திருக்கான் அதுவும் இல்லாம சிறப்பு சலுகையா 1000 ரூபா கொடுத்தா 1200 வழங்கபடும்னு போட்டிருக்கான் ..

மற்றொருவர் : நல்ல சலுகை தானே சார் ..

போலீஸ் : யோவ் ...200 நோட்டா கொடுத்திருக்காய்யா goverment இன்னும் 200 நோட்டு அடிக்கவே இல்ல..

மற்றொருவர் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : (22-Nov-16, 12:05 pm)
Tanglish : nalla salugai
பார்வை : 341

மேலே