நகைச்சுவை - ராமு, சோமு உரையாடல் - கைகொடுக்கும் உண்டியல்கள்

ராமு :டேய் சோமு , என்னடா அங்க நம்ம ஊரு
அம்மன் கோயில் முன்னே ?

சோமு : அதுவா அண்ணே, அங்க நம்ம ஊரு
பஞ்சாயத்து தலைவர் முன்னால
கோயில் உண்டியலை திறக்கறாங்க இன்னிக்கு
அதானாம் ....
ராமு : டேய் கோவில் உண்டியல் மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான்
திறப்பாங்க; போன மாசம் திறந்தாங்க..... இப்போ எதுக்கு
இவ்ளோ அர்ஜென்ட் ஆ திறக்கறாங்க ?

சோமு : அண்ணே உங்களுக்கு விஷயம் தெரியாதா, போன மாச
எண்ணல் பண உண்டி தொகையை பெரிய நோட்டா மாத்தி
அதாங்க ஐநூறு, ஆயிரம்னு .... நம்ம கோவில் லாக்கர் ல
வெச்சிருக்கு, இப்போ கோவில் அன்றாட செலவுக்கு
சில்லறை இல்ல அதாங்க இந்த ஐநூறு, ஆயிரத்தை மாத்தினால் ஒழிய;
அதனால அர்ஜென்ட் ஆ நிலைமை சமாளிக்க உண்டியலை இன்னிக்கு
திறக்கறாங்க சில்லறை தேடி ..................ஹீ........ஹீ........ஹீ...


ராமு : அப்போ எல்லா கோவிலும் உஷாரா இருக்கணும் இல்லையா

சோமு : என் அண்ணே ?

ராமு : டேய் சில்லறை நெருக்கடி நாட்டிலே, திருடர்கள் உண்டிகளை
சூறை ஆட வந்தாலும் வருவாங்க இல்லையா ?


சோமு : அப்போ கோவில் சுத்தி பலத்த காவல் வேண்டுமே அண்ணே .......


ராமு : ஆமாண்டா ..................ரொம்ப செரியா சொன்ன போ .....


இருவரும்....: சொல்லிப்புட்டாச்சு, நமக்கேன் வம்பெல்லாம் ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-16, 6:25 am)
பார்வை : 247

மேலே