லோனு தள்ளுபடி தள்ளுபடி

என்ட்ரா அங்க பேச்சு வேண்டி கெடக்குது...ம்.ம். பஞ்சாயத்த ஆரம்பிங்க.!

ஐயா.. என்ட்ற பேரு விஜய் மல்லையாங்க ...

நீ எவ்வளவு வாங்கியிருக்க...?

2000 கோடிங்கய்யா..

தள்ளுபடி தள்ளுபடி..!

ஐயா.. நான் அக்னைட் எஜுகேஷன் லிமிடெட்..

நீ எவ்வளவு..?

315 கோடிங்கய்யா..

தள்ளுபடி தள்ளுபடி..!

ஐயா.. நான் ஸ்ரீராம் கார்ப்பரேஷன் லிமிடெட்..

நீ எவ்வளவு..?

வெறும் 283 கோடிங்கதான்யா ..

தள்ளுபடி தள்ளுபடி..!

ஐயா.. நானும் வாங்கியிருக்கேங்கய்யா..

நீ எவ்வளவு கண்ணு வாங்கின..?

காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம எஜுகேஷன் லோன் போட்டு 2 லட்சம் வாங்கினேங்கய்யா.. வேலைக்கு போன உடனே சம்பாதிச்சு கட்டிடுறேங்கய்யா..

ஏண்டா பொறுப்பு இல்லாத நாயே.. அரசாங்கத்தில பணம் என்ன மரத்திலயா காய்க்குது.. நாட்டோடு பொருளாதாரம் என்றா ஆவுறது..? ஒரு மாசத்துக்குள்ள மொத்த பணத்தையும் திருப்பி கட்டுலன்னா குடியிருக்க வூடு இருக்காது ஆமா.. இது இந்த நாட்டாமையோட தீர்ப்புடா.. நீதிடா.. நேர்மைடா..!

எழுதியவர் : முகநூல் (22-Nov-16, 1:12 am)
பார்வை : 364

சிறந்த நகைச்சுவைகள்

மேலே