#hash_tag_for_life

நேற்று நினைவல்ல
நாளை கனவல்ல
இன்று நிஜமென்று
வாழும் மனமில்ல
ஆசை நிஜமல்ல
காதல் நிழலல்ல
நட்பு நிஜமென்று
வாழ விடையில்ல
அன்பும் உடனில்ல
அறிவும் பலனில்ல
இருளில் நடந்திடவே
நிழலும் துணையில்ல
பந்தம் வரவில்ல
பாசம் நிலையில்ல
தனிமை(யின்) குரலுக்கு
என்றும் பதிலில்ல
நேற்று எனதில்ல
இன்று உனதில்ல
நாளை ஆண்டிடவே
இருளும் தடையில்ல
- shadow writer