இறைவனும் மனிதனும்
பிறப்பும் இறப்பும்
இறைவன் கொடுத்தது
அதில் ஏற்ற தாழ்வு
மனிதன் வகுத்தது...
வாழ்க்கையின் பாதையும்
பயணமும் இறைவன் கொடுத்தது
அதில் கண்ணீரும் கவலையும்
மனிதன் சேர்த்தது....
இயற்கையும் இயற்கை வளமும்
இறைவன் கொடுத்தது
அதை அழித்து ஆட்டம் போடுவது
மனிதன் கண்டது...
இவனுக்கு அவள் அவனுக்கு இவள்
என்று இறைவன் நிச்சயித்தது
அதை வெற்று கவுரவம் காட்டி மனிதன் பிரிப்பது...
பண்பாடும் பகுத்தறிவும் சமூகம்
வகுத்தது அதை மனிததோல்
போர்த்திய மிருக கூட்டம் மாற்றி பேசுது...