கஷ்டகாலம்
அன்று கூட்டம் கூடியது
ரேஷன் கடைகளில்
இன்று கூட்டம் கூடுகிறது
வங்கி கிளைகளில்
அன்று ஒரு தாளின்
மதிப்போ ஆயிரம்
இன்று அதன் மதிப்போ
வெறும் காகிதம்
சில்லறை கிடைப்பது இல்லை
கடை வீதிகளில்
சிக்கி தவிக்கிற மக்கள்
மனதில் பீதிகளில்
பதுக்கிய பணம் பலகோடி
பரிதவிக்கிற மக்கள் நூறுகோடி
பணவீக்கம் குறையவும்- நாட்டின்
பொருளாதாரம் உயரவும்
கருமையை வெண்மையாக மாற்றவும்
அரசேடிக்கிற நல்ல நடவடிக்கை
காலம்தான் சொல்ல வேண்டும்
இதன் அருமையை ....!