எங்கள் நிஜ கடவுள்
மழலை பாசம்
மனதில் பதித்து,
மனைவி நேசம்
நெஞ்சில் புதைத்து
தாய் நாடு காக்க
தாய் மடி துறந்து ,
மீள்வோம் என்ற
ஒற்றை கனவுடன்...
நாம் இங்கு உறங்கிட
எல்லையில் கண் விழித்து
நாட்டுமக்களைக் காக்கும்
நீயே எங்கள் நிஜ கடவுள்...!!
ரௌத்திரம் கொண்டு
நமது தேசத்தின்
சரித்திரம் படைத்திட
தனது உதிரம் சிந்தி
கடும் பணியில் தங்கி
குகை குழியில் பதுங்கி
உறவுகளையும் ...
சொந்தங்களையும்
இதயத்தில் நிறுத்தி
எதிரிகளை அழிக்க
பீரங்கி ஏந்தி வீழ்ந்தாலும்
தன் வாழ்க்கை கனவுகளை
கண்ணீர் துளியில் கரைத்து
தன்னுயிர் துறந்து
இந்நாடு காக்கும்
நீயே எங்கள் நிஜ கடவுள்...!!
பல வீரர்களின் இறப்பு
அவர்களின் பிறப்பின்
அர்த்தத்தை பறைசாற்றுகின்றது,
வீரனே...
நீ உனக்காக யோசித்தால்
பலரின் உறக்கம்
உறைந்துவிடும் நாட்டில் ..
நம் தாய் மண்ணின்
மனம் தொட்ட
சேய்..-நீ
எங்களை காக்கும்
தாய் - உன்னை
வாழ்த்தி
வணங்குவதில்
என்றும்
பெருமைகொள்ள்கிறேன்
உன் சகோதரனாய்
என்றும் ...என்றென்றும்
ஜீவன்