காதல் திருமணம்

காதலை சொல்லி விடுவதென முடிவு
பூ தந்து சொல்ல ஆசை
உலகெங்கும் சுற்றினேன்
பூக்கள் கிடைக்கவில்லை
உன்னை விட அழகான பூக்கள்
கிடைக்கவே இல்லை

வேறுவழி இல்லை
காலங்காலமாய்
காதல் பறைசாற்றும்
ரோஜா பூ தந்து
காதல் சொல்ல
முடிவு செய்தேன்

எதை தேர்வு செய்ய
உன் பட்டு பாவாடை
நினைவூட்டும்
பட்டு ரோஜாவையா ?
இல்லை உன்
குளுமை
நினைவூட்டும்
ஊட்டி ரோஜாவையா ?

சட்டையுடன் பாவாடை
விரைவில் தாவனி ஆவதால்
பட்டு ரோஜா தவிர்த்து
ஊட்டி ரோஜா
மனதில் நின்றது

எந்த வர்ண ரோஜா
மீண்டும் தடுமாற்றம்

உன் பால் மனம்
சொல்லும் - வெள்ளை ரோஜா ?

உன் வெட்கம்
போற்றும் - சிகப்பு ரோஜா ?

உன் இதழ் போல்
பிரதிபலிக்கும் - ஆரஞ்சு வண்ணரோஜா ?

உன் மஞ்சள் பூசிய
அழகில் மயங்கி
படைக்க பட்ட
மஞ்சள் ரோஜா
மனம் கூற வாங்கினேன்

உனக்காய் காத்திருந்தேன்
நேரம் சென்றது
நேரம் தவறாமை
உன் குணம்
இன்று தவறினாய்

படபடப்பும் பரிதவிப்பும்
பயமும் பரவியது
கண்ணை மூடி வேண்டினேன்
உடனே வரம்
நீ வந்தாய்

நில் என்றேன்
என்ன என்றாய்
பூ நீட்டினேன்
கை நீட்டவில்லை

உன்னை காதலிக்கிறேன் என்றேன்
மௌனமாய் பார்த்தாய்
உன் மௌனம்
உன் எண்ணம் சொன்னது

பூ என்றேன்
வை என திரும்பினாய்
சற்று குனிந்து ஏற்றுக்கொண்டாய்
மஞ்சள் ரோஜாவை
மஞ்சள் தாலி போல்
கந்தர்வ மனம்
இதுவென்பேன்

எழுதியவர் : ஜெகன் ரா தி (23-Nov-16, 3:48 pm)
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 2345

மேலே